
“நீ சொல்கிற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அந்த கருத்தை சொல்கிற உன் உரிமையை நிலைநாட்ட நான் என் உயிரைக்கொடுக்குமளவுக்கும் போராடுவேன்” என்று வால்ட்டேர் சொன்னாராம். கருத்துரிமையை நிலைநாட்டுகிற இந்த வாக்கியத்தை ஜனநாயக நாடுகளில் பெரும்பாலும் மதிப்பார்கள். சீனா போன்ற இன்றைய கம்யூனிச நாடுகளிலும், முந்தைய சோவியத்திலும், க்யூபாவிலும், வெனிசுவேலாவிலும் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது அவர்களுக்குத்தான் இந்த வார்த்தைகள் தேவைப்படும் என்று கூரைமேல் ஏறி நின்று கொட்டாவி விடுவார்கள் ஜனநாயக அமெரிக்காவிலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும்.
9/11 சம்பவத்திற்கு பிறகு புஷ்ஷை இந்த அளவுக்கு துவைத்து தொங்கப் போட்டிருக்கிறார்கள் பாரன்ஹீட்9/11 படத்தில். இதைக் கருத்துச் சுதந்திரம் என்பதா? நேரு- எட்வினா கதையை ஒருஆள் இன்னும் எடுக்கக்கூட இல்லை, அதற்குள் நடந்துகொண்டிருப்பது நமக்குத் தெரியும். இல்லை இதைக் கருத்துச் சுதந்திரம் என்பதா? ஹாலிவுட் பாலா “..பாரன்ஹீட் 9/11 டாகுமெண்ட்ரிப் படங்கள் கொடுக்கும் அதிர்வை, மெய்ன் ஸ்ட்ரீம் படங்களால்… நிச்சயம் கொடுக்க முடியாது என்பது என் கருத்து…” நிச்சயமாய் பாலா சொன்னது உண்மை. பைனல் சொல்யூஷன் (Final Solution. குஜராத் கலவரங்களை ஆவணப்படுத்திய டாக்குமென்டரி இது , ராகேஷ் ஷர்மா இயக்கினார்.) இப்படி ஒரு டாக்குமென்ட்ரியை கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த படம் எனக்கு தந்த அதிர்ச்சியை இதுவரை வேறு எந்த படமும் தந்ததில்லை. அந்த 3 அல்லது நான்கு வயது (முஸ்லிம்) சிறுவன் சொல்லும் வார்த்தைகள், குஜராத் கலவரங்கள் அவனுக்குள் ஏற்படுத்திய வன்முறை எண்ணங்கள், என்னவென்று சொல்வது? இன்னும் 15 ஆண்டுகளில் குஜராத்தில் அந்தச் சிறுவன் ஒரு 4 இந்துக்களையாவது கொல்லும்போது ஊடகங்கள் ஓலமிடட்டும் முஸ்லிம் தீவிரவாதி என்று. (அந்தச் சிறுவனின் பெயர் நினைவில் இல்லை, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.)
மைக்கேல் மூரை, கலவரத்தோடே பார்க்கிறது அமெரிக்க அதிகார வர்க்கம். பின்னே, 9/11 சம்பவமா அதன் பின்னணியையும் கோமளியின் பங்களிப்பையும் வெளியே கொண்டு வா என்று ஒரு படத்தை எடுத்துத் தள்ளுகிறார். இன்ஸ்யூரன்ஸ் குளறுபடிகளா, வா க்யூபாவுக்கு உன்னை கள்ளத்தோணியில் கொண்டுச் சொல்கிறேன் அங்கே மருத்துவம் இலவசம் என்று அழைத்துச் செல்கிறார், அந்த குளறுபடிகளை வைத்து சிக்கோ என்று படமெடுக்கிறார். ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசா, “நீ இதுவரை ஒன்றையும் செய்யவில்லை, இதை நீ பரிசாக எண்ணாதே, இது வஞ்சப்புகழ்ச்சி, ஒழுங்காக சொன்னதை எல்லாம் செய்துவிடு இல்லை, நோபல் பரிசை ஆஸ்லோவுக்கு பார்சல் செய்து அணுப்பிவிடு” என்று கடிதம் எழுதுகிறார்.
அப்படி மைக்கேல் மூர் இயக்கிய பாரன்ஹீட் 9/11 டாக்குமென்டரி படம் பற்றிய என்பார்வை+கதை இது. பர்மா பஜார் ஆண்டவர்கள் கைவிரித்துவிட்டதால் இத்தனை தாமதம் இந்த படம் பார்ப்பதற்கு. இறுதியாக பேரு ஸ்டான்லிங்க கிட்ட நேற்று ஒரு வார்த்தை சொன்னேன் கிடைக்குமா என்று. நேற்றே போட்டுவிட்டார், தொடரட்டும் உம்தொண்டு.
படம் துவங்குவதே புஷ்ஷின் தேர்தல் வெற்றியில் ஆரம்பிக்கிறது, அதாவது ஒரு கோமாளியின் கூத்து அடுத்த 8 ஆண்டுகளுக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறது என்பதை நான்காவது ஆண்டே அந்த நான்காண்டு சம்பவங்களை வைத்துச்சொல்கிறார். அதை உணர்த்தும் விதமாக அந்த தேர்தல் குளறுபடிகளிலிருந்து துவங்குகிறது. செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்பு கடைசி 8 மாதங்களாக தலைவர் ஓய்விலிருக்கிறார். டே மடையா நீ இங்க வந்து இப்படி இருக்கியே டா உனக்கு வேலை இல்லையா இல்லையான்னு கேட்டா, கோல்ப் விளையாடுறார். அங்க இரண்டு விமாணம் wtcயை முட்டிடுச்சுன்னு சொன்னா என்ன பன்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கார். புஷ்ஷுக்கு அதிபர் தகுதியில்லைன்னெல்லாம் யாரும் சொல்லக் கூடாது. அவ்ளோ இக்கட்டான சூழ்நிலையிலயும் புத்தகத்தை நேராத்தான் வச்சிருக்கார். இப்படி புஷ்ஷோட கோமாளித்தனங்களோட படம் ஆரம்பிக்குதேன்னு யோசிக்கும் போதே, புஷ்ஷின் ராணுவ ரிப்போர்ட்டை வைத்து மூர் முதல் பகீரைக் கிளப்புகிறார், அங்கு கிளம்புகிறது அங்கிருந்து ஒரே சாட்டையடிசுழட்டல் தான் புஷ் குடும்பத்துக்கும் சவுதியின் ராயல் குடும்பங்களுக்கும் உள்ள தொடர்புகள், புஷ்ஷின் நிறுவனத்துக்கு கிடைத்த மூல தனங்கள், சவுதியின் குடும்பங்கள் (சவுதி அரசரின் எடுப்பு தொடுப்பு, எடுப்பின் தொடுப்பு, தொடுப்பின் தொடுப்பு, ஒசாமாவின் தந்தையின் இரட்டையிலக்க மனைவிமார்களின் குடும்பங்கள் – பொதுவாக சவுதி ராயல் குடும்பங்கள்) அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள், சவுதியின் தூதர் பதவி நியமனம், சவூதி தூதரகத்துக்குத் தரப்படும் அதீத பாதுகாப்பு, சவூதியின் டிரில்லியன் டாலர் முதலீடுகள் திரும்ப பெறப்பட்டால் அமெரிக்காவின் நிலை என்ன ஆவது என்ற சந்தேகங்கள், என அடுக்கிக் கொண்டே போகிறார்.
போர் என்பது நல்ல வருமாணம் தரும் தொழில் என்பது அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மனத்தில் 1914ல் இருந்து விழுந்துவிட்ட விதை. ” I’m a war president” என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிறார் புஷ். counter terrorism என்ற போர்வையில் லேடன் தேடுதல் வேட்டையை எப்படி தாலிபான்கள் அழிப்பை ஆஃப்கானிஸ்தான் மீதான் போராக மாற்றிக்கொண்டார்கள். ஒருவழியாக போதுமான லாபம் சம்பாதித்த பிறகு ஆஃப்கானிஸ்தானில் மயான அமைதியை நிலை நாட்டச் செய்த பிறகு முன்னாள் அமெரிக்க எண்ணெய் நிறுவணத்தின் ஆலோசகரை ஆஃப்கானிஸ்தானுக்கு அதிபராக்கிவிட்டு நகர்கிறார்கள். லாபவெறி எப்போதும் தன் பசியை நிறுத்திக்கொள்வதில்லை. அதற்கு மீண்டும் லாபம் தேவை, ஈராக்கிற்கு அப்படியே பொடிநடையாக நடந்து போகிறார்கள், அவர்கள் போய் சேர்வதற்குள் காரணம் சொல்லிவிடலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.
ஹேய் டிக்,
எதாவது காரணம் சொல்லுயா
எம்மா ரைஸ்,
நீ எதாவது சொல்லு
யோவ் பவல்,
நீயாவது சொல்லுயா
ஹே ரம்ஸ்பீல்ட் நீயாவது
மிஸ்டர் பு…ல்…ஷி ………. புஷ்
சதாம் ஒரு தீவிரவாதி,
ஆமாம் கரெக்ட் ஏற்கனவே எங்கப்பாவை கொல்லபார்த்தான் அந்த ஆள்…
அப்புறம்
டிக்: நியூக்ளியர் பாம்
பவல்: கெமிக்கல் வெப்பன்
ரம்ஸ்பீல்ட்: சதாம் + ஒஸாமா = அல்கொய்தா. அமெரிக்காவுக்கு ஆபத்து
ஏம்பா படை வீரர்களே ஈராக் போய்டீங்களா?
“சதாமுக்கு அல்கொய்தாவோட தொடர்பிருக்கு, நியூக்ளியர் பாம் வச்சிருக்காங்க, கெமிக்கல் வெப்பன் யூஸ் பண்ணப்போறாங்க. நாளைக்கு அமெரிக்கால பயன்படுத்த போறாங்க அமெரிக்காவை அழிக்கப்போறாங்க அதுக்கு முன்னாடி நீங்க ஈராக்க காலி பண்ணிடுங்க அவ்ளோதான். ”
ஈராக்கில் ஒரு பெண் புலம்புகிறார்,”எங்களை அழித்த அமெரிக்கா நாசமாய் போகட்டும், ஹே அல்லா அவர்கள் வீடுகளை தரைமட்டமாக்கிவிடு. ப்ளா ப்ளா ப்ளா…”அந்த பெண்ணுக்காகவும் புஷ்ஷுக்காகவும் இரண்டு மெசையாக்களும் இறங்கி வந்து ஒருவருக்கொருவர் அழி(டி)த்துக்கொண்டாலும் அவர்கள் சண்டையால் தனக்கேதும் லாபம் கிடைக்குமா என்றுதான் அமெரிக்க அதிபரும், தொழில் நிறுவனங்களும் பார்க்கும். ஈராக்கில் எண்ணெய் இல்லையென்றால் அங்கு ஏன் போர் தொடுக்கப்போகிறோம், அங்கு எண்ணெய் இல்லை என்றால் யார் ஈராக்கை கவணிப்பார்கள் என்று அரசுக்காதரவு தந்து கொண்டிருக்கும் (நிறுவணத்தின்) முதலாளித்துவ கூட்டமைப்பின் விருந்தில் ஒருவர் சொல்கிறார். ஆமாம், சோமாலியாவில் எண்ணெய் இல்லை நாங்கள் வந்தோமா? காங்கோவில் எண்ணெய் இல்லை நாங்கள் வந்தோமா? சும்மா எங்களை போர் வெறியர்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஆமாம் சொல்லிபுட்டேன்.
ஈராக்கில் போய் திணறிக்கொண்டிருக்கும் போர் வீரர்களை திரும்ப அழையுங்கள், இன்னொரு வியட்நாமை உருவாக்கிவிடாதீர்கள் என்று படத்தின் அடுத்த பகுதியை நகர்த்திச் செல்கிறார் மூர். நாட்டுக்கு திரும்பிய படைவீரர்களையும், அமெரிக்க தேசத்துக்காக தேச பக்தியோடு ஈராக்கில் இறந்துவிட்ட போர்வீரர் ஒருவரின் கடைசிக் கடிதத்தை அந்த படை வீரரின் தாய் படிக்கிறாள் கண்ணீரோடு, அந்தக் கடிதத்திலிருந்து சில வரிகள்:
"Hello. Hey, Mama....We are just out here in the sandand windstorms waiting. What in the world is wrongwith George? Trying to be like his dad, Bush. He got us out herefor nothing whatsoever. I am so furious right now, Mama. I really hope they do notre-elect that fool, honestly. We don't expect anythingto happen any time soon. I cannot wait to get home and get back to my life.Hope you guys are doing okay and keep sending the mail. It makes getting through the days easier. Well, I am on my way to bed. so I will write you guys soon. I love and miss all of you guys."
கிட்டத்தட்ட எல்லா படை வீரர்களும் இந்த மனநிலையில் இருந்தார்களென்று சொல்ல இயலாது. ப்ரிட்னி ஸ்பியர்ஸ் சொல்கிறார், “நான் அந்த கோமாளியை நம்புகிறேன், அவர் செய்வதெல்லாம் சரியே I’m on his side” என்கிறார். போரை நிறுத்து என்று சொல்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், என்கிறார் இன்னொரு பெண்மணி. இப்படிப் பட்டவர்களால் தான் மீண்டுமொருமுறை புஷ் அதிபரானது.
ராணுவத்திற்கு ஆள் சேர்க்க என்ன செய்கிறார்களென்று மிக்சிகனில் நடக்கும் கேலிக்கூத்துகளையும் அவர்கள் பின்னாலேயே சென்று விமர்சிக்கிறார் மூர். மன்னார்&கோ’வில் கூட 2004ல் HR போட்டு இண்டர்வியூ நடத்த ஆரம்பித்துவிட்டார்கள், ஆனால் இவர்கள் ராணுவத்துக்கு ஆள்பிடிக்கும் வேலையைப் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது. மைக்கேல் மூர், காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சென்று உங்கள் பிள்ளைகளை ராணுவத்தில் சேர்த்து ஈராக்கிற்கு அணுப்பும் வேலைக்காக நான் உங்களை அனுகுகிறேன் என்ற பிறகு அந்த பொறுப்பான காங்கிரஸ் உறுப்பினர்களின் முகங்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருக்கிறது. இந்த கோமாளியை மீண்டுமொருமுறை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள் என்ற கோரிக்கையோடு படத்தை முடிக்கிறார் மூர்.
கோல்டன் ராஸ்ப்பெர்ரி என்றொரு விருது இருக்கிறது, இந்த விருதில் வழங்கப்படும் பிரிவுகள்:மோசமான நடிகர்மோசமான நடிகைமோசமான துனை நடிகர்மோசமான துனை நடிகைமோசமான திரைப்படம்மோசமான இயக்குநர்மோசமான மோசமானமோசமான இப்படி நிறைய இருக்கிறது இந்த விருதில். 2004ஆம் ஆண்டு, மோசமான நடிகருக்கான ராஸ்ஸி விருது பெற்றவர்: ஜார்ஜ் புஷ்க்குமோசமான துணை நடிகர் விருது டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்மோசமான துணை நடிகை விருது ப்ரிட்ணி ஸ்பியர்ஸ்மோசமான ஜோடி விருது ஜார்ஜ் புஷ் கான்டலிசா ரைசு இந்த விருதுகள், ஆஸ்கர் வழங்கபடுவதற்கு ஒருநாள் முன்னதாக வழங்கப்படும்.
