கிரிஸ்டோபர் நோலனின் மெமண்டோ’வைப் பார்த்து ஏற்கனவே மண்டைக்குள் லநோன், ன்லநோ, ன்லநோ என மாறி மாறி உண்மையிலேயே மாறி மாறி ஓடிக்கொண்டேயிருந்தது. நோலனின் திரைக்கதை மாயஜாலத்தில் கட்டுண்டு போனேன். நான் முழுதும் உணர்ந்து பார்த்த முதல் நான் – லீணியர் திரைக்கதை அமைப்பு கொண்ட படம் மெமண்டோ தான். அதற்குபிறகு நோலனைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அடுத்தது நான் பார்த்த படம் இன்ஸாம்னியா, அது நான் லீணியர் இல்லை என்றாலும் அதன் ஏதோ ஒரு அம்சம் என்னை கவர்ந்தது . அந்த நேரத்தில் ஹாலிவுட் பாலா வின் அக்கரைச்சீமையில் following திரைப்படத்தின் ஆப்படிக்கும் கதையை தன் பாணியில் சொல்லியிருந்தார். அடுத்த நாளே பார்க்க நினைத்தபோது பர்மா பஜார் ஆண்டவர்கள் காலை வாரிவிட்டார்கள். டாரண்ட்டின் புண்ணியத்தில் அடுத்த சில நாட்களில் பார்த்தாகிவிட்டது. ஆனால்followingகைப் பற்றி எழுத என் புத்தி என்னை இத்தனை நாள் அனுமதிக்கவில்லை. அதே போல The prestiege யும் அவர் அறிமுகப்படுத்திய பின்னர்தான் அதன் முழு ஆழ அகலமும் எனக்கு புரிந்தது. ஹாலிவுட் பாலாவுக்கு நன்றி.
எப்போதோ படித்த ஒரு புத்தகத்தில் ”சிலந்தி வலை ஆச்சரியம் ” என்று ஒரு வரி வரும் . சிலந்தி பின்னும் வலை மட்டுமல்ல சில சமயங்களில் மணிதர்கள் பின்னும் வலைகளும் ஆச்சரியம் தான். அப்படி ஒரு வலையை படம் முழுக்க ஒருவன் பிண்ணிக் கொண்ட்டே செல்கிறான், அந்த வலையில் ஒருவன் அவனுக்குத் தெரியாமலே பின் தொடர்ந்து அந்த வலையின் ஒவ்வொரு இழைக்குள்ளும் மாட்டிக் கொண்டே செல்கிறான். அவனைச் சுற்றிப் பின்னப்பட்ட வலை அவனுக்குப் புரியும் போது அந்த வலை அவனை முழுதுமாக தின்றுவிடுகிறது.
ஒரு பொட்டி தட்டி பத்திரிக்கையாளன் தன் கதாபாத்திரங்களை உருவாக்க சாலையில் செல்பவர்களை பின் தொடர்கிறான், தொடர்ந்து கொண்டேயிருக்கிறான். அந்த பின்தொடர்தலில் அவன் சில விதிகளைப் பின்பற்றுகிறான். ஒருவரையே இரண்டாவது முறை பின்தொடர்வது இல்லை என்பது அந்த விதிகளில் ஒன்று. ஆனால் ஒருத்தனின் கைப்பையோ என்னமோ ஒரு இழவு இவனைக் கவர்ந்து விட அவனை தொடர்ந்து பின் தொடர்கிறான். பார்த்தவுடன் காதலைப் பற்றி மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு. பார்த்தவுடன் நட்பு அவர்களை எங்கோ கொண்டு சென்று விட்டு விடுகிறது.
தொடர்ந்து சில வீடுகளுக்குச் சென்று பூட்டை உடைப்பதும் அந்த வீட்டுக்குள் நுழைந்து தங்களால் என்ன என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். திருடுவது அவர்களது நோக்கமல்ல, த்ரில் அதுதான் முக்கியம் அவர்களுக்கு, அந்த த்ரில்லை நமக்கும் தருகிறார்கள். வீட்டு சொந்தகாரரிடம் மாட்டும் போதும் அநாயசமாக தப்பிக்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவராக நல்ல ஆச்சாரி வேலை செய்கிறார்கள், அதாவது ஆப்படிக்கிறார்கள், அதிலும் நன்பண் அடிக்கும் ஆப்பு திரைக்கதையின் உச்சக்கட்டத்தில்தான் நமக்குத் தெரிகிறது. இடையில் இவன் என்னயா? ஹீரோ இவன் நன்பனை இப்படி ஏமாற்றுகிறான் சரியான ஏமாற்றுப் பேர்வழி என்று தோன்றுகிறது. ஆனால் படம் முடிந்த பிறகு இவன மாதிரி இப்படி ஒரு ஏமாளியா என்று தோன்றுகிறது. //-இப்படி படம் முடிந்த பிறகும் யோசிக்க வைப்பதுதான் நோலனின் பாணி, அதிலும் பிரஸ்டீஜில் யோசிக்கவைக்கும் விதம், என்ன சொல்வது? இரண்டரை மணி நேர படத்தை ஒரு முழுநாளும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் திரைக்கதை -//
நோலனின் எல்லா படங்களிலும் கதாநாயகன் யார், வில்லன் யார் என நமக்கு தெரிகிறதோ முடிவில் அது அப்படியே தலைகீழாக மாறிவிடும் சாத்தியங்களோடே கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பார்வை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மாறும். என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தில் ஹீரோ என்று யாருமே இல்லை, க்ளைமேக்ஸுக்கு முன்பு வரை வில்லன் என்று யாருமே இல்லை. இந்த படம் முழுதும் கருப்பு வெள்ளையிலேயே நகர்வதால், சில விஷயங்களை உற்று கவணிக்காமல் போனால் தனித்தனிக் கதைகள் போலத் தோன்றும், அந்த விஷயங்களை உற்றுக் கவணிக்கும் போதுதான், முழுக்கதையின் பிரம்மாண்டம் நமக்கு புரிகிறது. பிரம்மாண்டமாய் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று உட்டோப்பியன் கதைகளாய் எடுத்துதள்ளிக்கொண்டிருக்கும் நம்ம ஊர் பிரம்மாண்ட இயக்குநர், பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை இந்த படத்தின் கதையில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
