மதுக்கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யக்கூடாதுதான். ஆனால், மோடி மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததானது என்னை உற்சாகப் படுத்தி இதை எழுத தூண்டிவிட்டது. மோடிக்கு நன்றி. நிற்க. அய்ன்ச்டைன்(Albert Einstein), இந்தப் பெயரைக் கேட்டாலே தலை தெறிக்க ஓடுமளவுக்கு மூன்றாண்டுகள் கல்லூரிக்காலத்தில் ஒரு விரிவுரையாளர் இயற்பியலை சாறாய்ப் பிழிந்து எங்களை எல்லாம் திகைக்க வைத்தார். ஆனால், இயற்பியலை ஒரு பாடமாய் எடுத்துப் படிப்பதற்கு முன்னரே, களைந்து நட்டுக்கொண்டு நிற்கும் தலைமுடியும், ஆழமான பார்வை கொண்ட கண்களுமாய் [...]
சின்னக் குத்தூசி மறைவு

மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக்குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க அவருடைய எழுத்துக்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் அவரது பேச்சின் சிறப்பம்சம். என்று பா.ராகவன் குறிப்பிட்டுள்ளார். அது போல, நான் விகடனில் எழுதிய என்னுடைய கட்டுரையை எடுத்துக் காட்டி முரசொலியில் அவர் எழுதிய இந்தக் கட்டுரை ஒன்றே [...]
மின்தமிழ்
என் பாட்டன் இறப்பதற்கு முன்பு அவருடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் முன்பாகவே அவருடைய சொத்தில் ஒரு பங்கை நான் அபகரித்து வந்துவிட்டேன், சொல்லப்போனால், அவர் நம்பி என்னிடம் அந்த சொத்துக்களை ஒப்படைத்தார். இத்தனை வருடங்களாக (கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்) நான் பத்திரமாகவே பாதுகாத்து வந்திருக்கிறேன். அந்தச் சொத்துக்களில் சிலதை தொலைத்திருக்கிறேன். நான் தொலைத்த முக்கியமான சொத்து “வால்காவிலிருந்து கங்கை வரை”, நான் அந்த புத்தகத்தை புதிய பதிப்பாகவே விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், என் பாட்டன் புரட்டிய, அடிக்கோடிட்ட புத்தகத்தைப் [...]
தமிழில் பெயர் வைத்தது தவறா?

ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது, இது இன்று நேற்றைய பழக்கம் இல்லை, பாரி, ஓரி, ஆய், அண்டிரன் என்ற சங்கப் பெயர்களெல்லாம் மங்கிப் போய் ராஜராஜ சோழன்களும், விஜயாலய சோழன்களும் தோன்றிய சங்கம் மருவிய காலத்திலிருந்து நீண்டு வரும் பழக்கம். அப்போதே தமிழனின் பெயருடன் வடமொழிக் கலப்பு கூடி குடும்பம் நடத்தத் துவங்கிவிட்டது. [...]
தமிழக மீனவர்கள் கொலையும் – ட்விட்டர்களாகிய நம் கடமையும்
தமிழக மீனவர்கள் ஐநூறு பேரை நாம் இதுவரை சிங்கள் ராணுவத்துக்கு பலிகொடுத்துள்ளோம். நம்முடைய அரசும் சரி, ஊடகங்களும் சரி இந்நிகழ்வில் பாராமுகமாக இருந்த போது தமிழ் ட்விட்டர்களாகிய நாம் ஒன்று கூடி நம் ஒற்றுமைய ட்விட்டரில் காட்டியதின் விளைவு சில வடநாட்டு ஊடகங்கள் நம்மைத் திரும்பி பார்த்தன. திரும்பிப் பார்க்க வைத்தோம். அது நம்முடைய முக்கிய வெற்றிகளில் ஒன்று. அதுவே போதுமானதா என்றால் நிச்சயம் இல்லை. தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்களில் மீனவர்களும் நாமும் மட்டுமே [...]
தமிழ் மீனவர்கள் கொலையும்- தமிழ் ட்விட்டர்களின் முயற்சியும், வெற்றியும்
ஒரே நேரத்தில் பலரது முகத்திரை கிழியும் சமயம் இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். இந்திய அரசின் முகம், தமிழக அரசின் முகம், ஊடகங்களின் முகம், ஓட்டுக் கட்சிகளின் முகம், பொறுப்புணர்ச்சி அற்ற பிரதமரின் முகம், மௌனம் காக்கும் தமிழக முதல்வரின் முகம் என அத்தனை பேரின் முகமூடிகளும் உதிர்ந்து விழுந்து அவர்களின் போலி முகங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் மெத்தனம்/அக்கறையின்மை/கையாலாகதத்தனம்/கூட்டுக் களவாணித்தனம் அத்தனையும் சேர்ந்து இதுநாள் வரை தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை [...]
லென்ஸ் வழியே – 4
பாலஸ்தீனக் கவிதைகள் -2
இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே, பாலஸ்தீனக் கவிதிகள் -1 அடக்குமுறைக்கெதிராக கொதித்தெழும் ஒவ்வொரு மனித மனமும் பறந்து சென்று இந்தப் பாலஸ்தீனக் கவிகளோடு சேர்ந்துகொள்ளவேச் செய்யும், அத்தனை வீரியமான வார்த்தைகளை இட்டு நிரப்பிய வெடிகுண்டுகளைப் போன்ற கவிதைகளைச் சமைக்கும் இவர்களது வார்த்தைகள் அடிமை விலங்குகளை அரித்தெடுக்கும் அமிலங்களாக பொங்கிக் கொண்டேயிருக்கின்றன. நீங்கள் எங்களுக்கு காயங்களைத் தந்த போதும், எங்கள் எலும்புகளை நொறுக்கிய போதும், நாங்கள் உங்களுக்கு எங்கள் நாட்டின் ரோஜாப்பூக்களையும் எங்கள் இசையை உங்களுக்கு இசைத்து காட்டவும் [...]
சென்னையின் நூலகங்கள்
கல்லூரி படிப்பிற்காக, மூட்டை முடிச்சுகளோடு சென்னை வருவதற்கும் முன்பாக, பிழைப்புக்காக சென்னையில் சிறு வாசம் புரிந்த நாளிலிருந்து இன்று வரை, சென்னைக்குள் நான் கழித்த காலங்கள், கல்லூரிக்கு அடுத்து நூலகங்களில் தான். விதவிதமான புத்தகங்களுக்கு அடுத்து விதவிதமான நூலகங்களை சென்னை எனக்கு காட்டியது. அன்னா சாலையில் தேவ நேயப்பாவாணார் நூலகம், எழும்பூரின் கன்னிமாரா நூலகம், பிரிட்டீஷ் கவுன்சில் நூலகம், சமீபத்தில் அன்னா நூற்றாண்டு நூலகம், என ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு விதத்தில். குறட்டைச் சத்தத்தோடு, தேடிய புத்தகமல்லாது, [...]
The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்
“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ் விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த [...]
