இன்னும் எத்தனை நாளைக்கு hotel rwanda, schindlers list என்று ஜல்லியடித்துக் கொண்டிருப்பீர்கள்? #killing fieldsஐயும் பாருங்கள். ஒரு துளி கண்ணீராவது நிச்சயம் . அவற்றோடு நேரடி தொடர்பு இல்லை… இங்கே ஓம் என்று ஒரு பெண்ணின் தலைகுணிந்து சொல்லும் போது அந்த மொழிக்குச் சொந்தக்காரராக நாம் இது என் மொழி என்று சொல்லிக்கொள்ளவும் தகுதியிழந்து போகிறோம். இந்த ஆவணப்படம் என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறிதான்? வல்லூறுகளின் அரவனைப்பில் ஓநாய் தஞ்சமடைந்திருக்கும் போது அதன் ஒரு ரோமத்தையும் [...]
தமிழக மீனவர்கள் கொலையும் – ட்விட்டர்களாகிய நம் கடமையும்
தமிழக மீனவர்கள் ஐநூறு பேரை நாம் இதுவரை சிங்கள் ராணுவத்துக்கு பலிகொடுத்துள்ளோம். நம்முடைய அரசும் சரி, ஊடகங்களும் சரி இந்நிகழ்வில் பாராமுகமாக இருந்த போது தமிழ் ட்விட்டர்களாகிய நாம் ஒன்று கூடி நம் ஒற்றுமைய ட்விட்டரில் காட்டியதின் விளைவு சில வடநாட்டு ஊடகங்கள் நம்மைத் திரும்பி பார்த்தன. திரும்பிப் பார்க்க வைத்தோம். அது நம்முடைய முக்கிய வெற்றிகளில் ஒன்று. அதுவே போதுமானதா என்றால் நிச்சயம் இல்லை. தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்களில் மீனவர்களும் நாமும் மட்டுமே [...]
தமிழ் மீனவர்கள் கொலையும்- தமிழ் ட்விட்டர்களின் முயற்சியும், வெற்றியும்
ஒரே நேரத்தில் பலரது முகத்திரை கிழியும் சமயம் இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். இந்திய அரசின் முகம், தமிழக அரசின் முகம், ஊடகங்களின் முகம், ஓட்டுக் கட்சிகளின் முகம், பொறுப்புணர்ச்சி அற்ற பிரதமரின் முகம், மௌனம் காக்கும் தமிழக முதல்வரின் முகம் என அத்தனை பேரின் முகமூடிகளும் உதிர்ந்து விழுந்து அவர்களின் போலி முகங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் மெத்தனம்/அக்கறையின்மை/கையாலாகதத்தனம்/கூட்டுக் களவாணித்தனம் அத்தனையும் சேர்ந்து இதுநாள் வரை தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை [...]
நீதிமன்ற தீர்ப்பும்- சில விவாதங்களும்
“நாட்டில் கலவரத்தைத் தூண்டாத வகையில், சமரசமாக வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, திறமையானது, இதுதான் இந்நேரத்தில் தேவையானது” என்று பல குரல்கள் இத்தீர்ப்பையொட்டி. இத்தகைய குரல்களில் பெரும்பாலானவற்றின் பின்னால் இந்துப் பாசிசம் ஒளிந்துகொண்டு வெற்றியை கொண்டாடும் மனநிலைதான் இருக்கிறது. உண்மையிலேயே இது நியாயமான தீர்ப்பா? இல்லவே இல்லை, பல கேலிக்கூத்துகள் அடங்கியது இது. முற்றிலும் மதநம்பிக்கையினடிப்படையில் ஒரு தீர்ப்பு வழங்க முடியுமென்றால், வழஙகலாமென்றால், சட்டப் புத்தகங்கள் எதற்கு? சட்டக் கல்லூரிகளைத் தூக்கிவிட்டு, மதக் கல்வி போதிக்கும், நம்பிக்கையைக் கற்றுக்கொடுக்கும், மடங்களையும் [...]
பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு அவர் சிலைக்கு மாலையிடலாமா?
இன்று காலை எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, “காந்தியின் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையான வீரணாக வாழ்ந்து, போராடி மடிந்து போன பகத்சிங்கின் பிறந்த தினத்தை ஏன் பெரும்பாலும் கொண்டாடுவதில்லை? அவனை நினைவு கூறவாவது செய்வோம்.” இதுதான் அந்த செய்தி. கன்னிமாரா நூலகத்துக்குச் செல்லும் வழியில் தினத் தந்தி மூலமாக, தமிழ் வளர்த்த சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்ய ஒரு கும்பலே காத்திருந்தது, கருப்பு-மஞ்சள்-சிகப்பு வண்னங்களில் கொடியேந்திய கோஷ்டியும், வெள்ளை-சிகப்பு-வெள்ளை வண்ணங்களில் கொடியேந்திய [...]
என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்
என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையா? சமூக நீதித்துறையில் அவர் செய்யாத போராட்டங்களா? வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்துக்காக அவர் மேற்கொள்ளாத முயற்சிகளா? அரசியல் சாசனத்தையே முதல் முறையாக திருத்தி எழுதும் அளவிற்குத்தானே அவர் போராட்டம் இருந்தது. “இந்த அரசியல் சாசனத்தை முதலில் கொளுத்தும் ஆளாக நான் இருப்பேன்” என்று பாராளுமன்ற அவையில் முழங்கிய அம்பேத்கரால் [...]
என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன்
“பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ‘ன்னா ஆ‘வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பல அரைகுறைகளில் ஒருவனல்ல நான். அந்தக் கிழவனின் சாதனையை அனுபவிக்கும் பல கோடிப்போரில் நானும் ஒருவன். அந்தக் கிழவன் சாதித்ததை அறிந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய 12 வயதில் ஒரு கவிதையை, என் பாட்டன் என் காது பட வாசித்திருக்கிறார், எனக்கு புரிதல் [...]
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல புத்தகங்களை எழுதி இச்சமூகத்துக்கு படைத்தார், அந்த புத்தகங்கள் சிறை மலர்கள் என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்த சிறைமலர்கள் வரிசையில் மூன்றாவது புத்தகம் “மனிதகுலமும் தமிழ்த் தேசியமும்“. இந்தச் சிறை மலரில் இன்னுமொரு முக்கிய புத்தகம் “உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்“. பழநெடுமாறன் அய்யாவினுடைய புத்தகங்களில் [...]
அம்பேத்கரும் பகத்சிங்கும் தேசிய வீரர்களல்ல, அவர்கள் எழுத்தைப் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்
ஆகஸ்டு 28ஆம் தேதியிடப்பட்ட தெஹல்கா இதழில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது, படித்த போது எரிச்சலாகவே வந்தது. (மருத்துவர் ருத்ரன் முகநூலில் பகிர்ந்து கொண்டதாலேயே, இச்செய்தியை நேற்று படிக்க நேர்ந்தது, இல்லாவிடில் இன்னும் இரு நாட்கள் கழித்துதான் இச்செய்தியை நான் படித்திருப்பேன்.) 2007ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மகராஷ்டிரத்தில் UAPA(Unlawful Activities Protection Act) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதே சட்டத்தின் கீழ்தான் அம்பேத்கர், பகத் சிங்கின் புத்தகங்களை வைத்திருப்பவர்களையும், கைது செய்திருக்கிறார்கள். தெஹல்காவின் [...]
