அகோரா – மதத்தின் மகத்துவம்

hypatia, christianity

பண்டைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தின் நூலகத்தில் ஐப்பேசியா(hypatia) மாணவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார், ஏன் நட்சத்திரங்கள் விழுவதில்லை, உங்கள் கையிலிருந்து விடுபடும் கைக்குட்டை ஏன் கீழே விழுகிறது என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாது இதெற்கெல்லாம் காரணம் ஈர்ப்புவிசை என்று. இன்னும் நியூட்டன் வரவில்லை, ஈர்ப்புவிசை கண்டறியப்படவில்லை, அது தாலமியின் காலம், பூமியை மையமாக வைத்து எல்லாம் சுற்றிவரும் ஒரு மாதிரியைத் தந்து அந்த மாதிரியிலேயே பிரபஞ்சத்துக்கு அப்பால் பரலோகத்துக்கும், பரமபிதாவுக்கு இடமளித்திருப்பார்.

Road To Perdition – நரகத்திலிருந்து விடுபடும் பயணம்

Road to perdition

(நான் சொல்ற படத்தை யாருமே பாக்க மாட்டேன்றீங்க என்று கவலைப்படும், கொழந்தைக்கு இந்த பதிவு சமர்ப்பனம். நீங்க சொன்ன அன்னைக்கு ராத்திரியே படம் பாத்துட்டேன் கொழந்த.) தந்தை மகன் உறவை விட மிகவும் சிக்கலான வேறொரு உறவு இருந்துவிட முடியாது .ஷெல்லிக்கு அவர் தந்தையோடு வெளியே தெரியாத அளவுக்கு மோசமான சிக்கல் இருந்திருக்கிறது. ஹிட்லரும் அவர் தந்தையும் முட்டிக் கொன்டிருந்திருக்கிறார்கள். முன்னவரின் கவிதைகளின் வீரியத்திற்கு அந்த உறவுச்சிக்கல் காரணம், -அதை அவர் அதிக இடங்களில் குறிப்பிடாத போதும்.- [...]

மூலத்தை மிஞ்சும் நகல்

பயம் உன்னை கைதியாக வைத்திருக்கும், நம்பிக்கையோ உன்னை விடுதலையடையச் செய்யும். -ஷஷாங் ரெடம்ப்ஷன் படத்திலிருந்து பிளாகரிசம் (Plagiarism) இந்த வார்த்தை நமக்கு புதிதல்ல, குறைந்தது இவ்வார்த்தையின் பொருளாவது. அந்தளவுக்கு நமது படைப்பாளிகள் அடிக்கடி இன்ஸ்பையர் ஆகித் தொலைவார்கள். மாட்டாத வரை மகான்களாக இருப்பார்கள். மாட்டிய பிறகும் மகான்களாக காட்டிக் கொள்ள முனைவார்கள். கே.பாலச்சந்தரிலிருந்து மிஷ்கின் வரை, தேவாவிலிருந்து விஜய் ஆண்டனி வரை, என இந்த பட்டியல் போய்க்கொண்டேயிருக்கும். திறமை இருப்பவர்கள் சில சமயம் மூலத்தைவிட நகலைச் சிறப்பாகச் [...]

The ghost writer – நிழல் எழுத்தாளன் கொண்டு வரும் உண்மை பிம்பம்

காந்தி செத்துட்டாரான்ற மாதிரியான கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்டு இதை எழுத துவங்குறேன். ரோமன் பொலான்ஸ்கி, சைனா டவுன்(China town) பியானிஸ்ட் (The pianist) போன்ற கதைகளைத் தந்தவர், நாஸிக்களிடம் மாட்டாமல் தப்பிக்கும் ஒரு கலைஞனின் வாழ்வை படமாக்கிய பொலான்ஸ்கி, நிஜ வாழ்விலும் சிறையிலிருந்து தப்பிக்க அமெரிக்க மண்ணில் காலடி வைக்காமல் தப்பித்து வாழ்ந்தது ஒரு கோர ஒற்றுமை.

The International – முகமூடிகளுக்கு பின்னால் நிற்கும் முதலாளித்துவம்

எந்த ஒரு சர்வாதிகாரியும், அமெரிக்க ஊடகங்களின் ஒருங்கமைந்த தண்மையை கண்டு பெருமிதப்படுவார் – நோம் சாம்ஸ்கி இன்று வாழும் அறிஞர்களில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த மொழியியல் அறிஞரும், அரசியல் விமர்சகருமான நோம் சாம்ஸ்கி, அவரைப் போல எனக்கு அடிக்கடி நிணைவுக்கு வந்து போகும் புத்தகமாக ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(Confessions of an economical hit man) என்ற புத்தகம் ஆகிவிட்டது. அப்படி சமீபத்தில் நினைவுக்கு வந்தது, The International- த இண்டர்நேஷனல் [...]

The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்

“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ் விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த [...]

சொர்க்கத்தின் குழந்தைகள்

சொர்க்கத்தின் குழந்தைகள்- Children of heaven சிறு வயதில் நீங்கள், பெரியவர்களால் நுழைய முடியாத மறைவான உலகத்தில் தலைமறைவு காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் தங்கையோ, அண்ணனோ செய்த தவறை பெற்றோரிடமிருந்து மறைத்து காப்பாற்றியிருக்கிறீர்களா? இந்த படத்தைப் பார்த்தால் உங்கள் சிறு வயது நினைவுகள் கிளறப்படுவதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு குட்டிச்சிறுமியின், பிய்ந்து போன வெளிர்சிகப்பு நிற ஷூ தைக்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கும் கதை, அந்த சிறுமியின் அண்ணனின் ஷூ பிய்ந்து போவதில் முடிகிறது. ஒரு சிறுமியின் ஷூ [...]

மொக்கை போன்பூத் – நாக் அவுட்

இரண்டு நாட்களாக பல்லில் வலி, நான்கு முறை, மரத்துப் போக, ஊசியை கடைசியாக முளைத்த ஞானப் பல்லுக்குக்(WISDOM TOOTH) கீழாக போட்டுவிட்டு, ஒன்றரை மணிநேரம், சுத்தியல் சிறிய அளவிலான கடப்பாரை, நெம்புவதற்கு ஒரு கருவி, கொறடா சகிதம் வந்து தாடை எலும்புக்குள் 40 சதவீதம் புதைந்திருந்த பல்லைத் தட்டி தட்டி, நெம்பி எடுத்து விட்டு, வாயின் உள்புறமாக தையல் போட்டு இரண்டு நாட்களுக்கு வாயை அதிகமாக திறக்காதே, திரவ உணவாக உட்கொள், அதிக அசைவு கொடுக்காதே எனப் [...]

காதல் அழகானது, குட்டிக் காதல் இன்னும் அழகானது

பள்ளிக்காலத்தில் எல்லோருக்கும் ஒரு காதல் இழையோடி காற்றிலே மறைந்து போயிருக்கும், காற்றில் கலந்துவிட்ட அந்தக் காதலை, எங்காவது காற்றைச் சுவாசிக்கும் போது, நினைவுகளை நினைவுகள் கொத்தித் தின்னும். என் நினைவுகள் என்னை நேற்று கொத்தித் தின்றது, நினைவுகளைச் சுமந்து வந்தது காற்றல்ல, லிட்டில் மான்ஹாட்டன் என்றொரு படம். ஒரு நியூயார்க் காதல் கதையை சொல்லப் போவதாகச் சொல்லும் ஒருவன், அழுகையோடும், கதறலோடும், நீ ஏன் என் வாழ்வில் வந்தாய் என்ற ஆற்றாமை கலந்த கோபத்தோடும் அந்தக் காதலைச் [...]

என் நாட்குறிப்பு -02

“ஒவ்வொரு வரலாற்றுக்கும் ஒவ்வொரு பக்கம் இருக்கும்.” என்றார் ஒருவர். (சொன்னவர் பெயர் கடைசியில்) அதைப்போல 1857 ஆம் அண்டு முதல் சுதந்திரப்போர், சிப்பாய் கலகம், சிப்பாய் புரட்சி என்று அழைக்கப்படும், ஒரு வரலாற்று நிகழ்வைப் பற்றி நம்மில் பலர் பள்ளிகளில் மூனேமுக்கால் பக்கத்துக்கும் குறைவாக படித்திருப்போம், இன்னும் சிலர் பல புத்தகங்களில் படித்திருப்போம். இந்தியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் பெரும் புகழ்பட பாரட்டப்பட்டிருப்பதைப் படித்திருப்போம், ஆனால், ஆங்கிலேய வரலாற்றாளர்கள் பார்வையில் இந்நிகழ்வு அந்தளவுக்கு புகழ்பட பாரட்டப்படவில்லை, எல்லாம் [...]