காதல் சுகமானது சுமையானது

3265429063_1030a0deb0

ஆதலினால் உலக காதலர்களே காதலியுங்கள் உலகம் உன்னைப் பார்த்து எச்சில் உமிழும் வரை காதலியுங்கள், பெண் போலிஸ், உங்கள் டவுசரைக் கிழிக்கும் வரை காதலியுங்கள், வங்கி அன்பர்கள் போண் செய்யும் வரை காதலியுங்கள், ஏனென்றால், காதல் சுகமானது, சுமையானது, வெங்காயமானது, வெண்ணையாய் வழுக்குவது. காதலித்தால் உங்களைச் சுற்றி ஒளிவட்டம் தெரியும்.ஆழக்கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம். காதலித்தால் உன்னை உலகமே கவணிக்கும். ஆதலினால் காதலியுங்கள், ஏனென்றால் உலகம் உடுக்கையானது நீங்கள் உடுக்கையடிக்கலாம்.

மொக்கை போன்பூத் – நாக் அவுட்

இரண்டு நாட்களாக பல்லில் வலி, நான்கு முறை, மரத்துப் போக, ஊசியை கடைசியாக முளைத்த ஞானப் பல்லுக்குக்(WISDOM TOOTH) கீழாக போட்டுவிட்டு, ஒன்றரை மணிநேரம், சுத்தியல் சிறிய அளவிலான கடப்பாரை, நெம்புவதற்கு ஒரு கருவி, கொறடா சகிதம் வந்து தாடை எலும்புக்குள் 40 சதவீதம் புதைந்திருந்த பல்லைத் தட்டி தட்டி, நெம்பி எடுத்து விட்டு, வாயின் உள்புறமாக தையல் போட்டு இரண்டு நாட்களுக்கு வாயை அதிகமாக திறக்காதே, திரவ உணவாக உட்கொள், அதிக அசைவு கொடுக்காதே எனப் [...]

கவிதை எனச் சொல்லப்பட்டவையும் எழுதப்பட்டவையும்

வேறு வேறு தருணங்களில் வேறு வேறு பயண்பாடுகளுக்காக எழுதப்பட்டவை இவை. முதல் மட்டும் வஞ்சிப்பாவில் எழுதப்பட்டது, எப்படியும் இந்த கவிதைகளுக்கு (அப்படிச் சொல்லப்படுகிற) 3லிருந்து 5 வயது ஆகலாம். இலையெனும்நிலை யிலும்இறை சிலைபலஎடுத் திவன்மகிழ் கலைநடனமே புரிதறு தலையினருடை யதிந்நிலம் பனித்துளி மார்கழி மாத அதிகாலை வேளை கீழாநெல்லியின் இலை மீது விழும் பனித்துளியினும் மெல்லியவளே பேசும்போது மட்டுமேன் இத்தனை வல்லினமிடுகிறாயோ? துணையாய் வா மின்சாரமில்லாத அமாவசை இரவில் நான் மட்டும் தனியனாய் நடைபயில்கிறேன். என்னுடன் வந்துவிடு [...]

எங்கே செல்லும் பாகம்-7

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பகுதியை எழுதுற தொடர்கதை இது, எனக்கு முன்னாடி ஆறு பேர் இந்த தொடர்கதையை எழுதிட்டாங்க, சென்னைக்குள்ள சுத்திகிட்டு இருந்த கதையை நம்ம பாலா ஒரு ரூமுக்குள்ள கொண்டு வந்து அடைச்சி வேகமாக்குனாரு, வினோத் ஹாலி பாலா சொன்ன மாதிரி சூர்யா பட எஃபெக்ட்ல தென் ஆப்பிரிக்காவுக்கு ப்ளைட்ட பறக்க வச்சாரு, ஆனா கிஷோர் திரும்ப ஏர்போர்ட்டுக்குள்ளாற இறக்கிவிட்டுட்டாரு, நான் நம்மளால முடிஞ்ச அளவுக்கு கிண்டி வரைக்கும் கொண்டு வந்து விட்டு இருக்கேன். இனிமே யாராவது [...]

சில பாடல்கள்

1) 2) 3) 4)

காதல் செரிமானம்

எல்லா அவள்களிலும் இருக்கும்எல்லாமும் உன்னிலும் உள்ளதடி- உன்னில் இருப்பது எல்லாம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால், உன்னோடு வருபவள் எனக்குள் ஏதும் செய்வதில்லை, உன்னோடு வருபவளுடன் வரும் நீயோ ஏதோ செய்கிறாய் அது எதனாலெனும் தேடலோடு உன்னை விழியிரண்டால் விழுங்கத் தொடங்கினேன். இன்னும் செரிமானம் ஆகவில்லை, ஜெலுசில் வாங்கனும் ஒரு 50ரூபா தாயேன்.

காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை

காதல் சுகமானது, சுமையானது, வெங்காயமானது, வெண்ணையாய் வழுக்குவது என்று எதேதோ சொல்வார்கள். காதலித்தால் ஒளிவட்டம் தெரியும் என்றார்கள், ஆற்காட்டார் எல்லோரையும் காதலிக்கச் சொல்கிறார். ஆழக்கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம் என்பார்கள், நீச்சல் தெரியாதவன் முத்தெடுக்க கிளம்பிவிட்டான். முத்தெடுக்கச் சென்ற முத்துவை சிப்பிக்குள் அடக்கம் செய்துவிட்டார்கள். காதல் தேர்வு போன்றது தோற்றாலும் மீண்டும் மீண்டுமெழுதலாம் என்பார்கள், 15 ஆண்டுகளாய் சர்வேசன் தேர்வெழுதிக் கொண்டிருக்கிறார், கல்லூரியிலும், பேருந்து நிலையத்திலும். காதலித்துப் பார், உன்னை உலகமே கவணிக்கும் என்பார்கள். கடலை போட்டுகொண்டே சாலையைக் [...]