இன்னும் எத்தனை நாளைக்கு hotel rwanda, schindlers list என்று ஜல்லியடித்துக் கொண்டிருப்பீர்கள்? #killing fieldsஐயும் பாருங்கள். ஒரு துளி கண்ணீராவது நிச்சயம் . அவற்றோடு நேரடி தொடர்பு இல்லை… இங்கே ஓம் என்று ஒரு பெண்ணின் தலைகுணிந்து சொல்லும் போது அந்த மொழிக்குச் சொந்தக்காரராக நாம் இது என் மொழி என்று சொல்லிக்கொள்ளவும் தகுதியிழந்து போகிறோம். இந்த ஆவணப்படம் என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறிதான்? வல்லூறுகளின் அரவனைப்பில் ஓநாய் தஞ்சமடைந்திருக்கும் போது அதன் ஒரு ரோமத்தையும் [...]
வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…
தனநந்தன், நந்த வம்சத்தின் கடைசி அரசன். இவனைக் கலகம் செய்து தோற்கடித்தே சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக்கு வந்து, மௌரியர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தான். பெயருக்கேற்றார் போல, ஏராளமான செல்வத்தைத் தானே குவித்து வைத்திருந்தான், அன்றைய அம்பானிபோல பெரிய மாளிகையில் வாசம், ஏராளமான பொன், பொருள் என்று வரலாறு இவனைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கிறது. பிராமணர்களுக்கு தாணமளிப்பது இல்லை, யாகம், வேள்வி எதுவுமில்லை. இதனாலேயே கூட இவனிடம் இத்தனை செல்வம் சேர்ந்து இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடவே, [...]
சோமநாதபுரம் கதையும் வரலாறும் – ரூமிலா தாப்பர்
மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் [...]
The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்
“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ் விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த [...]
பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு அவர் சிலைக்கு மாலையிடலாமா?
இன்று காலை எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, “காந்தியின் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையான வீரணாக வாழ்ந்து, போராடி மடிந்து போன பகத்சிங்கின் பிறந்த தினத்தை ஏன் பெரும்பாலும் கொண்டாடுவதில்லை? அவனை நினைவு கூறவாவது செய்வோம்.” இதுதான் அந்த செய்தி. கன்னிமாரா நூலகத்துக்குச் செல்லும் வழியில் தினத் தந்தி மூலமாக, தமிழ் வளர்த்த சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்ய ஒரு கும்பலே காத்திருந்தது, கருப்பு-மஞ்சள்-சிகப்பு வண்னங்களில் கொடியேந்திய கோஷ்டியும், வெள்ளை-சிகப்பு-வெள்ளை வண்ணங்களில் கொடியேந்திய [...]
என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன்
அறிமுகம் என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் லொயோலாவில் படித்த காலத்தில் எனக்கு, ஆறுமுகப் பிள்ளை என்பவர் தமிழ் பேராசிரியராக இருந்தார், அவர் வகுப்பு எப்போதும் கலகலப்பாகவும், சில சமயங்களில் பொருள் பொதிந்ததாகவும், பல சமயங்களில் இரு பொருள் பொதிந்ததாகவும் இருந்ததுண்டு. அவரைப் பற்றி அந்த மாதிரியான பிம்பம் மட்டுமே எனக்கிருந்தது. அதற்கடுத்த பருவத்தில் உரையாடல் கலை வகுப்பில் ஒரு நாள் சிறப்பு அழைப்பாளராக எங்களோடு உரையோட அவரை அழைத்திருந்தோம், “…நான் எம்.பில் படிக்கும் போது பெரியார் [...]
ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி
“அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் தந்தையின் புத்தகங்களின் ராயல்டியை நம்பி அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு களங்கம் வராமல் இருந்திருக்கலாம், இந்திய வரலாறு கொஞ்சம் திசை மாறியிருக்கும். “பாக்கிஸ்தான் கட்டாயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உடைந்துவிடும்” என்று அப்போதே நான் கூறினேன் என்று டாம்பீக தாத்தாச்சாரியர் ஒருவர் பெருமையடித்திருக்கிறார். அவர் கூறியது [...]
என் நாட்குறிப்பு -02
“ஒவ்வொரு வரலாற்றுக்கும் ஒவ்வொரு பக்கம் இருக்கும்.” என்றார் ஒருவர். (சொன்னவர் பெயர் கடைசியில்) அதைப்போல 1857 ஆம் அண்டு முதல் சுதந்திரப்போர், சிப்பாய் கலகம், சிப்பாய் புரட்சி என்று அழைக்கப்படும், ஒரு வரலாற்று நிகழ்வைப் பற்றி நம்மில் பலர் பள்ளிகளில் மூனேமுக்கால் பக்கத்துக்கும் குறைவாக படித்திருப்போம், இன்னும் சிலர் பல புத்தகங்களில் படித்திருப்போம். இந்தியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் பெரும் புகழ்பட பாரட்டப்பட்டிருப்பதைப் படித்திருப்போம், ஆனால், ஆங்கிலேய வரலாற்றாளர்கள் பார்வையில் இந்நிகழ்வு அந்தளவுக்கு புகழ்பட பாரட்டப்படவில்லை, எல்லாம் [...]
