தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் இத்தகைய முரண்பட்ட மனிதர்களின் முயற்சியிலேயே அடங்கியிருக்கிறது.

அத்தகைய முரண்பட்ட மனிதர் பெரியாரின் பிறந்த தினம் இன்று. அவரின் ஒவ்வொரு பிறந்த நாளையும் பெரியார் காலத்தில் எழுச்சி விழாக்களாக கொண்டாடிய தலைமுறை இங்கு இருக்கிறது. ஆனால், இன்று, இந்த தலைமுறைக்கு, பெரியாரின் தேவை எப்படிப் பார்க்கப்படுகிறது? முகவரி சொல்லும் அடையாளக் குறிப்புக்காக இவரின் சிலைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுமட்டும் தான் இவரின் இன்றைய தேவையா, பயனா?

வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்(reservation), வகுப்புவாரி உரிமை என்று பெரியார் முழங்கிய போதெல்லாம், அமைதியாக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவர்களெல்லாம், இடஒதுக்கீடாய் குறிக்கி, அதைச் சிறுமைப்படுத்தி, கேலி பேசிக் கொன்டிருக்கும் காலத்தில் பெரியாரின் தேவை இல்லையா? அதைத் தன்னுடைய உரிமையாக உணராத ஒரு தலைமுறையை நீ ஒதுக்கீட்டில் வந்தவன்தானே என்று “இந்திய உயர் கல்வி நிறுவனங்கள்” ஒலிக்கும் போது அது என்னுடைய உரிமை என்று மறுத்துக் குரல் எழுப்பத் வலுவில்லாமல் தூக்குக்கயிற்றைத் தழுவும் இளைஞர்களுக்கு பெரியாரின் தேவை இருக்கிறது. அதை உரிமை என்பதை உணர்ந்தவன் தன் எதிர்ப்பை அங்கு கட்டாயம் பதிவு செய்வான்.

நிலாவுக்கு இந்தியாவிலிருந்து எத்தனை பேரை அனுப்புகிறீர்கள் என்று மேதகு அமெரிக்க அதிபர் கேட்க இந்திய பிரதமர் பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து 3, தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 2 பேர், ……….. என்று பட்டியலிடுகிறாராம். அதற்கு அமெரிக்க அதிபர், நீங்க இன்னுமாடா திருந்தலை என்று கேலியாக கேட்கிறாராம். இது குறுஞ்செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் வகுப்புவாரி உரிமையை (இடஒதுக்கீட்டை) கேலி பேசி வந்தது.
இத்தகையக் கேலிக்குரல்களை ஒலிப்பவர்களில் பலருக்கும் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத தகவல் , இத்தகைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு அமெரிக்காவில் பெயர் Affirmative action, இங்கிலாந்தில் பெயர்  positive discrimination, கணடாவில் employment equity. இன்னும் பட்டியலிட்டுக் கொண்டேபோகலாம். இடஒதுக்கீடு இந்தியாவின் சாபக்கேடு என்று கூவிடும் குரல்களுக்கு இதையெல்லாம் காண்பதற்கு கண்ணில்லை. அவர்களைப் பொறுத்தவரை இடஒதுக்கீடு கூடாது.

இத்தகைய கேலிச் செய்திகளைக் கூட அறிவின்மை என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், குதர்க்க யுக்தியோடு இப்படி பேசும் குரல்களை மறுக்க வேண்டிய கட்டாயம் அவசியமானது.

நேர்மையாக சொல்லவேண்டுமென்றால் இன்று பிராமணர்கள் முதல்வராகலாம், உலகநாயகன் ஆகலாம், மருத்துவர் இஞ்சினியர்தான் ஆக முடியாது # இடஒதுக்கீடு

http://twitter.com/#!/thoatta/status/112931312842719232

இவர்களுக்கெல்லாம், இது சலுகையல்ல, உரிமை என்பதை உணர வைக்க வேண்டிய தேவைக்காவது பெரியாரியத்தின் இருப்பு  அவசியமாகிறது.

 

சென்ற ஆண்டு பெரியார் பிறந்தநாளின் போது, பல பதிவர்களைத் தொடர்பு கொண்டு ஒரு தொகுப்பாக ஆக்கும் முயற்சியில் எழுதப்பட்ட கட்டுரைகள்.

 

 

comments

Comments

  1. pugal says:

    பெரியாரின் மக்கள் தொண்டு அளப்பரியது,
    இதை மக்கள் என்றும் நினைவில்
    நிறுத்த வேண்டும்,
    அவர் தொடங்கிய அந்த மாபெரும் பயணத்தை நாம் மேலும் சிறப்பாக தொடர வேண்டும்.

  2. pugal says:

    பார்ப்பனன் என்றுமே தமிழனுக்கு இரண்டகம் செய்பவன் என்பதை என்றும் மறவாதே.
    இந்த இன பிறவிகளான பார்பனர்களை புறக்கணியுங்கள்.
    இந்திய தமிழர்களை தமிழ் இனப்பற்று இல்லாத களர்நிலமாக
    மாற்றுவதுதான் இவர்களின் களப்பணி.

    இனத்தால் ஒன்றியுள்ள
    ஈழ தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் எந்த உறவும் இல்லை
    என்று பார்ப்பனர்கள் மிக இயல்பாக பொய் பரப்புரை செய்வார்கள்.

    ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை என்று போலி வேதம் ஒதுவார்கள்
    தமிழன் தில்லி அரசாங்கத்திடம் கையேந்தியே பிழப்பு நடத்த வேண்டும்
    அப்பதான் இந்த கயவர்கள் தமிழக அரசாங்கத்தை விமர்சித்து கொண்டே இருக்கலாம்.
    இந்த கயவர்களின் எண்ணம் என்னவென்றால்
    தமிழனுக்கு இந்தியன் என்ற மாய உணர்வே மேலோங்கி இருக்க வேண்டும் தமிழ் என்ற உணர்வு எழவே கூடாது.

  3. pugal says:

    BTW ,
    UNESCO described Periyar as “the prophet of the new age, the Socrates of South East Asia, father of social reform movement and arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners

Speak Your Mind

*

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124330இதுவரை:

பதிவின் உரிமம்