Stephen King – Shashank redemption – The green mile

டிஸ்கி: இது நான் பார்த்த இரண்டு படங்களைப் பற்றிய ஓர் ஒப்பீட்டுப்பார்வையே – வெட்டிவேலையே- ஏற்கனவே இந்த இரு படங்களில் ஒன்றான Shashank redemption பற்றிய என் விமர்சனம் இங்கே.

சிறைச்சாலைப் பற்றிய திரைப்படங்களை பட்டியலிட்டால் அவற்றில் முதலிடம் Shashank redemption படத்துக்குத் தான், அதே போல அந்த பட்டியலில் The green mile படத்துக்கும் ஒரு இடம் உண்டு. இந்த 2 படங்களுக்குமுள்ள ஒற்றுமை, சிறைக்குள் நடக்கும் கதைகள் என்பதையும் தாண்டி, இரண்டு கதைகளுக்கும் சொந்தக்காரர் ஸ்டீஃபன் கிங்.

இரன்டு படங்களுக்கும் எக்கச்சக்க முரண்பாடுகள் கதையளவில். சாஷங் ரெடம்ப்ஷனில் ஒரு நிரபராதி தப்பிக்கிறான், க்ரீன் மைலிலோ ஒரு நிரபராதி தண்டிக்கப்படுகிண்றான். சஷாங் ரெடம்ப்ஷன் ஒரு (இரண்டு பேர்) கைதியின் பார்வையில் சொல்லப்படும் கதை, க்ரீன் மைல் ஒரு சிறைச்சாலை காவலதிகாரியின் பார்வையில் சொல்லப்படும் கதை. சாஷங் ரெடம்ப்ஷன் ஒரு மிகப்பெரியச் சிறையின் மொத்தபிரமாண்டமும் கதைக்குள் அடைக்கப்பட்டு விருந்து படைக்கப்பட்டதென்றால், க்ரீன் மைலில் ஒரு பகுதியை (E block) பற்றிய ஒரு சிறையின் கதை.

முந்தையதில் சிறைக்குள் பெரும்பகுதியைக் கழித்துவிட்டு, வெளியுலகை , வெளியுலக வாழ்க்கையை முற்றிலும் மறந்து, தொலைத்துவிட்டு விளிம்புநிலை மனிதனாய் வெளியே செல்பவர்க வாழ்ந்திருப்பார்கள் ஜேம்ஸ் விட்மோரும், மார்கனும். சிறையை விட்டு வெளியே வந்த சில நாட்களில் வெளிஉலகின் ஒழுங்கற்ற வாழ்க்கையை (அவர்கள் பார்வையில்) வாழமுடியாமல் தவிப்பார்கள். விட்மோர் எடுப்பது ஒரு முடிவு, மார்கன் எடுப்பது மற்றொரு முடிவு. ஆனால் பிந்தைய படமோ வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் மனிதர்களைப் பற்றியது. அவர்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது, அவர்கள் முடிவு நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் கையில் இருப்பது எல்லாம், இருக்கும் வாழ்க்கையை வாழ்வது தான். அந்த வாழ்க்கையையும் க்ரஹாம் க்ரீன் (Graham greene) வேறுமாதிரி வாழ்கிறார். மைக்கேல் ஜெட்டர்(Michael jetter) வேறுமாதிரி வாழ்கிறார்.

ஷாஷங் ரெடம்ப்ஷனில் விட்மோர் ஒரு காக்கையை வளர்க்கிறார், அவர் சிறையை விட்டு வெளியேறும் போது அந்த காக்கையை நினைத்துக் கொண்டே வெளியேறுகிறார். க்ரீன் மைலில் ஜெட்டர் எலியை வளர்க்கிறார், அவருக்கு அந்த எலியை கொஞ்சுவதிலும் வளர்ப்பதிலும் தான், தன் மிச்ச வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது என்று நினைத்து வளர்க்கிறார். அதற்குப் பெயரும் வைத்து தனக்கு மரணதண்டனை நிறைவேற்றப் போகும் தருணத்தில் தன்னுடைய எலியை சிறைக்காவலதிகாரியின் கைகளில் (டெக்னிக்கலி தோளில்) பத்திரமாக ஒப்படைத்துவிட்டு பரிதாபமாகச் செத்துப்போகிறார். அந்த எலியோடே அவருடைய வாழ்க்கையை பயங்கரமாக பிணைத்துகொள்கிறார். அந்த எலியோடான ஜெட்டரின் பினைப்புக்குப் பிறகும் டாம் ஹாங்க்ஸோடு அந்த எலிக்கு பிணைப்பு ஏற்படுகிறது.

ஷாஷங் ரெடம்ப்ஷனில் சிறைக்காவலர்கள் எந்தளவுக்கு சுயநலவாதிகளோ, கொடுமைக்காரர்களோ, கடிணமானவர்களோ அதற்கு நேர்மாறானவர்கள் க்ரீன்மைலில் வரும் சிறைக்காவலர்கள், டாம் ஹாங்க்ஸ், பேரி பெப்பர், டேவிட் மோர்ஸ், ஜெஃப்ரி டீமன் ஆகிய நான்கு பேருமே சாந்த சொரூபர்கள், அதே நேரம் கடிணமான சூழலில் விரைந்து செயல்பட்டு நிலமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிதீரபிரதாபர்கள். ஆனால், டோ ஹட்ச்சிஸன் இந்த 4 பேருக்கும் நேர்மாறானவர், மிஸ்டர் அடாவடியாக வருபவர், கடிணமான சூழலை கையாளத் தெரியாத ஒரு கோக்குமாக்கு.


comments

Speak Your Mind

*

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124298இதுவரை:

பதிவின் உரிமம்