சித்தர்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஓலைச்சுவடிகளிலும், (அன்றைய பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளில் தான் வாசம் புரிந்தன) சித்த மருத்துவ வல்லுநர்கள் செவிவழியாக தங்கள் வழிவந்தவர்களுக்கும் சொல்லியதுதான் சித்த மருத்துவ முறைகள். மூத்த தொல்குடிகள் தோன்றிய குமரிக் கண்டத்தில்தான் மூத்த மருத்துவமான சித்தமருத்துவமும் தோன்றியது. குமரிக் கண்டம் கடலில் போனபோதே சித்தமருத்துவத்தின் பெரும்பகுதியும் நம்மை விட்டொழிந்து போனது. யூதர்கள் வழக்கொழிந்து போன தங்கள் மொழியை மீள் உருவாக்கம் செய்ததைப் போல, சமஸ்கிருதம் அக்ரஹாரங்கள் மூலமாய் மீள் [...]
மாயாவதி: ஒரு வாழ்க்கை – புத்தக விமர்சனம்
மேலவளவையும், பாப்பாபட்டியையும், கீரிப்பட்டியையும் பார்த்தவர்கள் நாம், ஒரு பஞ்சாயத்துக்குத் தலைவராவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ள வெற்றிகரமான இந்திய ஜனநாயகத்தின் குடிமக்கள் நாம். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு தலித் மாநில முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. அப்படிப்பட்ட மாயாவதியின் சாதனையையும் வாழ்க்கையையும் கொண்டாடும் விதமாக அவர் வாழ்க்கையை அலசுகிறது கிழக்குப் பதிப்பகத்தின் மாயாவதி: ஒரு வாழ்க்கை என்ற புத்தகம். தந்தைபெரியாரின் ஐம்பது அறுபது ஆண்டு காலப் பிரச்சாரமும். அவருடைய வழிவந்த [...]
அத்வானி – புத்தக விமர்சனம்
”பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு நாங்கள் உறுதி…” இவ்வாறு தான் இந்திய அரசியல் சாசனம் (Constitution of India) துவங்குகிறது. அதாவது இந்திய அரசானது எந்த மதத்தையும் சாராத, எந்த மதத்துக்கும் சார்பானதாக விளங்காது என்பது பொருள். மேற்கூறிய வாசகம் தீவிரமாய் கடைபிடிக்கப்படுமானால், (உண்மையானால்) எந்த அரசு அலுவலகங்களிலும் வாசலில் பிள்ளையார் உட்கார்ந்துகொண்டு வாயிற் காப்பாளன் வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது, எந்த அரசு அலுவலகங்களிலும் ஆயுதபூஜையும் வெள்ளிக்கிழமை பூஜையும் நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ரம்ஜானுக்கு இஃப்தார் [...]
1857 சிப்பாய் புரட்சி – ஒரு விமர்சனம்
புரட்சி என்பது மார்க்ஸ் சொல்வதைப்போல “தலைகீழாகப் புரட்டிபோடுவதுதான்“. ஆனால், 1857ன் சிப்பாய் புரட்சி என்பது, இருக்கின்ற எந்த அமைப்பையும் புரட்டிப்போடவில்லை. அதிகாரத்தை வெள்ளையர் கைகளிலிருந்து சுதேச ராஜாக்களின் கைகளுக்கு மாற்றவில்லை. மாறாக, கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த இந்தியாவின் அடிமைவிலங்குக்கான பூட்டின் சாவியை பிடுங்கி இங்கிலாந்து மகாராணியின் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்தக் கொத்துச் சாவியில் சொருகியதைத்தான் செய்தது. ஆனாலென்ன நாம் இந்தியர் . அதனால் இதை வீரதீரமிக்க மாபெரும் புரட்சி என்போம் இந்த எண்ணம் தான் நம்மிடம் இதுநாள் [...]
களை எடுக்க ஒரு மண்வெட்டி
”மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். மணிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது, மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.” என்று எங்கெல்ஸ் தனது “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” நூலில் கூறியதை மீண்டும் ஒரு முறை மீள் பார்வை செய்வதற்கு நம்மாழ்வாருடைய “களை [...]
