தந்தை பெரியார் பிறந்தநாள்

Periyar_with_Jinnah_and_Ambedkar

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் இத்தகைய முரண்பட்ட மனிதர்களின் முயற்சியிலேயே [...]

நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி, பெரியார், தமிழ்நாடு

நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ஜஸ்டிஸ் (Justice) என்று மூன்று பத்திரிக்கைகளை நடத்தியவர்கள். அப்படி வரலாற்றை [...]

அடியாழத்தில் இருக்கும் வெறுப்பு

பிரபாகரன் குடும்பம்

“பொதுநல வாழ்விற்கு வந்த பின், மானம் கவுரவம் என்பதையெல்லாம் பார்க்கக் கூடாது” என்று பெரியார் ஒரு முறை மேடையில் குறிப்பிட்டாரே, இந்த வார்த்தைகளுக்குப் பின்னால், அந்தக் கிழவன் எத்தனை அனுபவத்தைப் பார்த்திருக்க வேண்டும். அத்தனையையும் பார்த்து இந்தச் சொல்படி நடந்ததால் தான், இறப்பதற்கு சில தினங்கள் வரைக்கும் கூட அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி மேடையில் முழங்கினான். அவனேதான் தனிமனிதனின் சுயமரியாதையை இந்த மண்ணில் பெருமளவுக்கு போதித்தவன். அத்தனை வெறுப்புகளையும், கல்லடிகளையும் சந்தித்தவன் அவன். அவன் இறந்த முப்பது [...]

அம்பேத்கரின் எழுத்துகளின் வழியே…

Periyar_with_Jinnah_and_Ambedkar

அம்பேத்கரின் கருத்துக்களில் இதற்கு முன் எனக்கு பெரிய பரிச்சயம் இல்லை, அதே போல லெனினுடைய எழுத்துக்களிலும் எனக்கு பரிச்சயம் இல்லை. பரிச்சயம் இல்லை என்பதைவிட அவர்கள் எழுத்துக்களின் கனம் தாளாதவனாகவே நான் இருந்திருக்கிறேன், அவர்கள் எழுத்தைப் புரிந்துகொள்ள முடியாத அறிவிலியாக இருந்திருக்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. பெரியாரினுடைய எழுத்துக்கள் எனக்குள் தானாக உட்சென்றிருக்கின்றன, எளிமையான மொழி அவருடையது, அதே நேரத்தில் சொல்லவந்தக் கருத்தை முற்றிலுமாக சொல்லாமல் முற்றுப்பெற்று நின்றதில்லை. முன்பே சொல்லியதைப் போல, [...]

தமிழில் பெயர் வைத்தது தவறா?

தமிழ்

  ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது, இது இன்று நேற்றைய பழக்கம் இல்லை, பாரி, ஓரி, ஆய், அண்டிரன் என்ற சங்கப் பெயர்களெல்லாம் மங்கிப் போய் ராஜராஜ சோழன்களும், விஜயாலய சோழன்களும் தோன்றிய சங்கம் மருவிய காலத்திலிருந்து நீண்டு வரும் பழக்கம். அப்போதே தமிழனின் பெயருடன் வடமொழிக் கலப்பு கூடி குடும்பம் நடத்தத் துவங்கிவிட்டது. [...]

குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-2

இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே நான், சொல்லுகின்ற விஷயங்களில் சில வார்த்தைகள் சிலருக்குச் சற்று அதிக காரமானதாய் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மூடநம்பிக்கைகளிலும் குருட்டுத் தனமான பழக்க வழக்கங்களிலும் ஈடுபட்ட ஒரு ஜனசமூகத்திற்குக் கொஞ்சம் வேகமான மருந்து கொடுத்துதான் வியாதியைத் தீர்க்க வேண்டியிருக்கிறது.” என்கிறார். அவருடைய சொற்பொழிவுகள் உண்மையிலேயே கடுமையான மருந்தைத் தான் கொடுத்திருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன. இங்கு, பெரியாரையும் அவருடைய சொற்பொழிவுகளையும் விடுத்துப் பார்ப்போமானால், இத்தனை வீரியமான [...]

குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-1

திராவிட இயக்கத்திலும், அதன் வரலாற்றினூடேயும் கரைந்து போன மூத்தவர்களுக்கு குஞ்சிதம் குருசாமி என்ற பெயர் திராவிட இயக்கத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட தலைவர்களுள் ஒருவர் என்பது தெரியும். திராவிடம், திராவிடர் என்ற சொற்கள், அரசியல் கட்சிகளாலும், அவற்றின் அரைகுறைத் தலைவர்களாலும் கொச்சைப்படுத்தப்பட்ட, பொருளிழக்கப்பட்ட சொற்களில் ஒன்றாகிப்போன காலகட்டத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற இளம் தலைமுறையினர் பலரும் அறிந்தும் கூட இராத ஒரு தலைவர் குஞ்சிதம் குருசாமி அம்மையார். அவரைப்பற்றி இதற்கு முன்பு அறிந்ததெல்லாம், குத்தூசி குருசாமியின் துனைவியார் [...]

ஓங்கி ஒலிக்கவேண்டிய குரல்களும் , கூவி விற்கும் குரல்களும் – நோம் சாம்ஸ்கியின் பேட்டி

“நம்மை மயக்கி, ஏய்த்து, பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும். ஒருநாள் பூரா படிப்பதற்கும் அதில் விஷயமிருக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம்? நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும், பொழுது போக்கு விஷயமுமாகத்தானே இருக்கும்.” – தந்தை பெரியார் (இக்கட்டுரையின் பெரும்பகுதி, அவுட்லுக் பத்திரிக்கையின் 15ஆம் ஆண்டு சிறப்பிதழின் நோம் சாம்ஸ்கியுடனான நேர்காணலின் மொழிபெயர்ப்பே.) நோம் சாம்ஸ்கி, அமெரிக்க அரசியல் வரலாற்றிலும், மொழியியல் துறையிலும் பரவலாக மதிக்கப்படும் ஆராய்ச்சியாளர், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை [...]

என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்

(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். பெரியார், தன் ஆயுள் காலம் முழுதும் எந்த மதத்தை எதிர்த்தாரோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், பெரியாருக்கு கடன் பட்டவர்கள் என்னும் தன் பார்வையை இங்கு பதிவு செய்கிறார். வலைப் பதிவு: http://govikannan.blogspot.com) ஆத்திகம் அறிவிழந்து மக்களின் வாழ்வியலை கேள்விக் குறி ஆக்கிய போதெல்லாம் சமணர், புத்தர் இன்னும் எண்ணற்றோர் வரிசையில் நாத்திக பெரியார்கள் [...]

என் பார்வையில் பெரியார் – வினோத்

(கல்லூரியில் என்னோடு பயின்றவன், என் பார்வையில் பெரியார் என்று கட்டுரைகளைத் தொகுக்க எண்ணியபோது, கவிதையையும் சேர்க்கலாம் எனத் தோன்றியது, கவிதைக்காக நான் முதலில் கேட்டது இவனைத் தான், ஒரு நாள் இடைவெளியில் எழுதித் தந்தான், சில இடங்களில் மட்டும் திருத்தம் செய்து, இன்னும் சில தகவல்களைச் சேர்க்கச் சொல்லி நான் தொல்லை தந்த போதும், பொறுமையாய் மாற்றங்களோடு இக்கவிதையை தந்தான். வலைப்பதிவு: http://ennachidharal.blogspot.com ) சிந்திப்பதாலொன்றும் சிரம் சிதறிடாதென்று சொல்லி திரிந்தார் தான் சொல்வதையும் சேர்த்து எவன் [...]