‘புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி’ என யுனெஸ்கோவால் பாராட்டப்பட்டவர் ஈ.வே.ரா. பெரியார். ஆனால் அவருடைய சிந்தனைகள் நூல்வடிவம் பெறுவது அவ்வளவு எளிமையானதாக இல்லை. அவருடைய எழுத்தும் பேச்சும் நூல்வடிவம் பெறுவதற்கு அரும்பாடுபட்டவர் வே.ஆனைமுத்து. பெரியார் உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அதற்கான முயற்சியைத் தொடங்கி மூன்று பெரும் வால்யூம்களாக அதைத் தொகுத்தவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்’ என்ற அந்த நூல் தொகுப்பு மீண்டும் வெளியாக இருக்கிறது. இரண்டாயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட அது இப்போது [...]
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு முன்பதிவுத் திட்டம்
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு (திருத்தப்பட்டு, விரிவாகம் செய்யப்பெற்றது)
தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” நூலின் –திருத்தப்பட்டு விரிவாக்க, செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது. பெயர்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி இவற்றுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் இன்றியமையாத அரிய அடிக்குறிப்புகளைக் கொண்டது. நூலை வெளியிடுவோர்: “பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினர்” [...]
